லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

Litro Gas
By Fathima Apr 03, 2023 10:36 AM GMT

லிட்ரோ  எரிவாயுவின் விலை நாளை (04) நள்ளிரவு குறைக்கப்படும் என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறிவித்துள்ளார். 

12.5 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன்களின் விலை 1000 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ரூபாவின் வலுவடைந்தமை

நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

லிட்ரோ எரிவாயுவின் விலை தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு | Gas Price To Reduce By Significant Amount Sl

நிறுவனத்தின் வரலாற்றில் லிட்ரோ எரிவாயுவின் அதிகூடிய விலைத் திருத்தம் இதுவாகும் என  பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தையில் எரிவாயு விலை வீழ்ச்சி மற்றும் இலங்கை ரூபாவின் வலுவடைந்தமை உள்ளிட்ட பல காரணிகள் கணிசமான விலை குறைப்புக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.