ஆடை ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Apr 03, 2023 01:01 AM GMT

ஆடை ஏற்றுமதி வருமானம் குறைந்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வெளியிட்ட இவ்வருட பெப்ரவரி மாதத்திற்கான வெளிநாட்டுத் துறையின் செயற்பாட்டு அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடை ஏற்றுமதி வருமானம்

ஆடை ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி | Garment Export Earning In Sri Lanka

கடந்த ஆண்டு பெப்ரவரியில் ஆடை ஏற்றுமதி வருமானம் 496.4 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில் இவ்வாண்டு பெப்ரவரியில் 431.3 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை ஏற்றுமதியில் 1012.5 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த நிலைமை 15.5 வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.