கிண்ணியா பிரதான வீதியில் குப்பை கூளங்கள்: பொதுமக்கள் விசனம்

Trincomalee Sri Lankan Peoples Eastern Province
By Laksi Jan 02, 2025 06:57 AM GMT
Laksi

Laksi

கிண்ணியா (Kinniya) பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, கொழும்பு பிரதான வீதியில், சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

போத்தல்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், உணவகங்களில் உள்ள மாமிச கழிவுகள் மற்றும் வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்தத் தெரு ஓரங்களில் குவிந்து காணப்படுகின்றன.

இந்தப் பகுதியில், இனங் தெரியாதோரால், இரவு நேரங்களில், இவ்வாறான கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருவதால் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை

ஜனாஸா எரிப்புக்குக் காரணமானவர்களை தண்டிக்க ஹக்கீம் தனிநபர் பிரேரணை

மக்கள் கோரிக்கை

குறித்த வீதியில் சுமார் நூறு மீட்டர் தூரம் வரை மூன்று இடங்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

கிண்ணியா பிரதான வீதியில் குப்பை கூளங்கள்: பொதுமக்கள் விசனம் | Garbage Piles On Kinniya Street Public Nuisance

இந்த கழிவுகளை நாடி, யானைகளும் முதலைகளும் இந்தப் பகுதியில், நடமாடி வருவதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியால் பிரயாணம் செய்வது ஆபத்தானதாக மாறி இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, கிண்ணியா பிரதேச சபை இந்த விடயத்தில், உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

63 அத்தியாவசிய பொருட்களின் பண்ட வரி தொடர்பில் வெளியான அறிவித்தல்

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

இன்று ஆரம்பமாகும் மூன்றாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery