ரணிலுக்கு ஆதரவு வழங்க மகிந்த விதித்துள்ள நிபந்தனை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்தால், அவருக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம்
மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது. கட்சி சார்பில் வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம்.
ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி எம்முடன் செல்லத் தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழுமையாக ஆதரவளிக்க நடவடிக்கை எடுப்போம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |