முதலமைச்சர்களுக்கு அதிகப்படியான எரிபொருள் ஒதுக்கீடுகள்: வெளியான தகவல்
சப்ரகமுவ (Sabaragamuwa) மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்களுக்கு அதிகப்படியான எரிபொருள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டமை குறித்து கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் மஹீபால ஹேரத் மாதந்தோறும் 4,700 லீற்றர் பெற்றதாக தெரியவந்துள்ளது.
இது அதிகாரப்பூர்வ 1,700 லீற்றர் வரம்பை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும் என குழுவின் முன்னிலையில் தெரியவந்துள்ளது.
எரிபொருளுக்கான கொடுப்பனவு
இதனிடையே, முன்னாள் முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவவின் எரிபொருளுக்கான கொடுப்பனவு, அவர் வெளிநாட்டில் இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய பரிமாற்றம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத போதிலும், இதற்கான உத்தரவு கொப்பேகடுவவிடமிருந்து வந்தது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனூடாக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |