எரிபொருள் விலையில் மாற்றம்

Fuel Price In Sri Lanka
By Kamal May 31, 2024 04:10 PM GMT

இன்றைய தினம் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 92 ஒக்டேன் ரக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 355 ரூபாவாகும்.

95 ஒக்டேன் ரக பெற்றோலின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றம் | Fuel Prices Be Changed

இதன்படி புதிய விலை 317 ரூபாவாகும். சுப்பர் டீசலின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை ஒரு 202 என்பது குறிப்பிடத்தக்கது.