அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர்

Sri Lanka Sri lanka Post
By Rukshy Oct 06, 2025 07:51 AM GMT
Rukshy

Rukshy

அஞ்சல் துறைக்குள் மோசடி மற்றும் திறமையின்மை தொடர்பான பல நிகழ்வுகளை அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரிகளின் இத்தகைய தவறான நடத்தை காரணமாக தான் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு எதிரான நிதி மோசடி: அமைச்சர் குமார ஜயகொடி கோரும் அனுமதி

தனக்கு எதிரான நிதி மோசடி: அமைச்சர் குமார ஜயகொடி கோரும் அனுமதி

 தேவைக்கு அதிகமாக தொழிலாளர்கள்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு ஹப்புத்தளை அஞ்சல் நிலையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய சத்குமார, முறையான கைரேகை பதிவுகள் இல்லாமல் கூடுதல் நேரக் கொடுப்பனவுகளாக, மில்லியன் கணக்கான ரூபாய்கள் மோசடியாகக் கோரப்பட்டுள்ளதாக, சுட்டிக்காட்டியுள்ளார்.

அஞ்சல் துறைக்குள் மோசடி : வெளிப்படுத்திய அஞ்சல் அதிபர் | Fraud Within The Postal Department

இதன்படி, சில ஊழியர்கள் வாகன சேவைக்காக கூடுதல் நேர கொடுப்பனவைக் கோரியுள்ளனர்.

பெரும்பாலும் தேவைக்கு அதிகமாக தொழிலாளர்களைப் பட்டியலிட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் உள்ள உயர்கல்வி அமைச்சகத்திற்கு பிலிமத்தலாவையிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்று, அதன் இலக்கை அடைய கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது என்ற சமீபத்திய சம்பவத்தை மேற்கோள் காட்டி, அஞ்சல் மா அதிபர், அஞ்சல் விநியோகத்தில் ஏற்பட்ட தாமதங்களையும் விமர்சித்துள்ளார்.

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு : இந்தியா - பாகிஸ்தானின் நிலைப்பாடு வெளியானது

காசா குறித்த ட்ரம்பின் அறிவிப்பு : இந்தியா - பாகிஸ்தானின் நிலைப்பாடு வெளியானது