நான்கு வயது மகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
கேகாலை ருவன்வெல்ல பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டியந்தோட்டை கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற நான்கு வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ருவன்வெல்லபொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கிணற்றொன்றில் நேற்றைய தினம் (17) நான்கு வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன் கிணற்றின் அருகில் குழந்தையின் தயார் மயங்கி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்த சிறுமி
இந்தநிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கும் மற்றும் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயாரே சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன் அவர் சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸார் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |