முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது!

Sri Lanka Police Crime Ashoka sapumal rangwalla
By Fathima Dec 12, 2025 09:17 AM GMT
Fathima

Fathima

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலை விபத்தொன்றிற்கு பிறகு, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் கைது இடம்பெற்றுள்ளது.

விபத்து 

சப்புகஸ்கந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப், கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது! | Former Speaker Ashoka Ranwala Has Been Arrested

சபுகஸ்கந்த டெனிமல்லா பகுதியில் நேற்றையதினம் (11) இரவு 7.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த நேரத்தில் காரில் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ள நிலையில் இருவரும் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்தப் பெண் கிரிபத்கொட மருத்துவமனையிலும், சிறு குழந்தை லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை

மேலும், விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது! | Former Speaker Ashoka Ranwala Has Been Arrested

விபத்துடன் தொடர்புடைய ஜீப், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சப்புகஸ்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் மதுபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.