பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை, கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பங்களாதேஷில் இடம்பெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தமது பதவியை இராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதனையடுத்து யூனுஸ் தலைமையில் பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.
ஹசீனா முக்கிய குற்றவாளி
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் பல ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அத்துடன், அவர் மீது தொடர்பான வழக்குகளில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பங்களாதேஷில் 2026ஆம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
எனினும் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடை விதித்துள்ளதுடன், தேசிய அடையாள அட்டைகள் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்ய உத்தரவு
இந்நிலையிலேயே ஷேக் ஹசீனா உள்ளிட்ட புலனாய்வு அதிகாரிகள் 29 பேரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |