முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணையில் செல்ல அனுமதி

Gampaha Douglas Devananda Crime Law and Order
By Fathima Jan 09, 2026 07:37 AM GMT
Fathima

Fathima

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்று (09) கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, ​​அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

விசாரணைகள் 

 2019ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றவாளி மாகந்துரே மதுஷின் மீதான விசாரணைகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணையில் செல்ல அனுமதி | Former Minister Douglas Devanandawa Granted Bail 

இதன்போது, 2001ஆம் ஆண்டு இராணுவத்தால் டக்ளஸுக்கு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, மதுஷிடம் கண்டுபிடிக்கப்பட்டது. 

இது தொடர்பான விசாரணை குறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையிலேயே, தற்போது அவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.