கொத்து - பிரைட் ரைஸ் விலைகளில் மாற்றம்
Sri Lanka
By Fathima
கொத்து ரொட்டி, சாப்பாட்டு பொதிகள் மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் நாளை (5) முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் .
இதன் புதிய விலைகள் நாளை அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோதுமை மா உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் மாவு சார்ந்த உணவு பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.