கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் கொடியேற்றம்!

Ampara Sri Lankan Peoples Kalmunai
By Fathima Nov 22, 2025 07:54 AM GMT
Fathima

Fathima

காரணக் கடல் எஜமான் குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீது, ஸெய்யித் அப்துல் காதிர் நாகூரி மாணிக்கப்பூரி பாதுஷா நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 204 வது கொடியேற்று பெருவிழா நேற்று ஆரம்பமாகியுள்ளது.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் வருடாந்தம் இடம்பெறும் இந்த பெருவிழாவும் 460 வது மனாகிப் மஜ்லிஸும் இவ்வருடமும் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் விமர்சையாக இடம்பெற்றுள்ளது.

கொடியேற்றம்

கொடியேற்ற தினமான நேற்று அதிகாலை 2:00 மணி மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்வும், காலை 8:00 மணிக்கு பெண்கள் தலைபாத்திஹா மஜ்லிஸும், பிற்பகல் 3:45 மணிக்கு மௌலித் மஜ்லிசுடன் கொடி ஊர்வலம் நடைபெற்று மாலை 5:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃபில் கொடியேற்றம்! | Flag Hoisting Ceremony At Kalmunai Beach

இங்கு நாளாந்த நிகழ்வுகளாக கத்முல் குர்ஆன் மஜ்லிஸ், மீரான் சாஹிப் மௌலித் மஜ்லிஸ், றிபாயி ராத்திப் மஜ்லீஸ், ஜியாரத் மஜ்லிஸ், சன்மார்க்க பயான் மஜ்லிஸ், விசேட இஸ்லாமிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வுகள் சங்கைக்குரிய சாதாத்மார்கள், உலமாக்கள், அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளது.

இறுதித்தினமான 2025.12.03 புதன்கிழமை லுஹர் தொழுகையின் பின்னர் மாபெரும் கந்தூரி அன்னதானம் வழங்கப்பட்டு, அன்றைய தினம் அஸர் தொழுகையுடன் கொடி இறக்கும் நிகழ்வும் இடம்பெறும்.

மேலும் 2025.12.04 வியாழக்கிழமை அகில இலங்கை பக்கீர் ஜமாஅத்தினரின் கந்தூரி நிகழ்வும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.