சாய்ந்தமருதில் இடம்பெற்ற சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாண்டு நிறைவு நிகழ்வு

Ampara Sri Lanka Eastern Province
By Rukshy Jul 04, 2024 04:28 AM GMT
Rukshy

Rukshy

சாய்ந்தமருதில் சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு விசேட இலட்சினை அறிமுக விழாவும் ஹஜ் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்று (03) சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

குறுந்திரைப்படம் ஒளிபரப்பு

இந்நிகழ்வுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.எம். அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிலோன் மீடியா போரத்தின் விசேட இலட்சினையை அறிமுகம் செய்து வைத்தார்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாண்டு நிறைவு நிகழ்வு | Five Year Anniversary Event Ceylon Media Forum

விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கௌரவ அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில உதவி செயலாளர் எஸ்.ஏ.எம்.இப்றாகிம் மக்கி, சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத், திருநெல்வேலி அலி சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.நெய்னார் முஹம்மட் கடாபி, ஏ.பி.எஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாய்ந்தமருதில் இடம்பெற்ற சிலோன் மீடியா போரத்தின் ஐந்தாண்டு நிறைவு நிகழ்வு | Five Year Anniversary Event Ceylon Media Forum

இதன்போது சிலோன் மீடியா போரம் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் குறுந்திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGallery