கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் மண்டபத்தில் திடீர் தீ விபத்து!

By Fathima Jun 17, 2024 09:29 AM GMT

கொழும்பு (Colombo) மாளிகாவத்தை (Maligawatte) பகுதியில் தீ விபத்து சம்பவமொன்று இடப்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (17) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தீயணைப்பு படையினர் 

இந்தநிலையில், மாளிகாவத்தை ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் மண்டபத்தில் திடீர் தீ விபத்து! | Fire Accident In Colombo

இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் மற்றும் சொத்து சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.