தனக்கு எதிரான நிதி மோசடி: அமைச்சர் குமார ஜயகொடி கோரும் அனுமதி
தனக்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒரு சமர்ப்பிப்பை மேற்கொள்ள வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அனுமதி கோரியுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு அவர் உரக் கூட்டுத்தாபனத்தில் (Fertiliser Corporation) சேவையாற்றியபோது இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து இந்த சமர்ப்பிப்பை மேற்கொள்ள ஜனாதிபதி சட்டத்தரணி (President’s Counsel) ஒருவர் ஊடாக அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இருப்பினும், ஆணைக்குழுவானது, அமைச்சர் குமார ஜயகொடி தேவைப்பட்டால் தனது சமர்ப்பிப்புகளை எழுத்து மூலம் வழங்கலாம் என்று அறிவித்துள்ளது.
கேள்விப்பத்திரம்
இந்த புதிய கோரிக்கையின் காரணமாக, அமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கை மேலும் தாமதமடைய வாய்ப்புள்ளதாக அறியமுடிவதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, 8 மில்லியன் ரூபாய் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமைச்சருக்கும் மேலும் இருவருக்கும் எதிராக உயர் நீதிமன்றத்தில் தேவையான நடவடிக்கைகளைத் தாக்கல் செய்ய பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்கவுக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
இந்த விசாரணையின் கீழ் வந்த குறிப்பிட்ட ஒரு கேள்விப்பத்திரத்தை (tender) வழங்கிய கேள்விப்பத்திர சபையின் தலைவராகவே குமார ஜயகொடி அப்போது பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |