தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி: தந்தை கைது
தனது 10 வயது மகளை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய பசறை வெல்கொல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
குறித்த நபர் தனது மனைவி வயலுக்கு சென்றிருந்த வேளையில், 10 வயதுடைய தனது மகளை தகாத முறைக்கு உட்படுத்தியுள்ளதாக சிறுமியின் தாயார் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |