இலங்கையில் நாணயத்தாள்களை பயன்படுத்தும் மக்களுக்கு விசேட அறிவுறுத்தல்
6 போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவரை தம்புத்தேகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தம்புத்தேகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை சோதனையிட்ட போது அவரிடமிருந்து போலி 500 ரூபா நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 17 வயதுடையவர் எனவும் அவர் நொச்சியாகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது வீட்டில் போலி நாணயத்தாள்கள் அச்சிட பயன்படுத்தப்படும் பல உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை போலி நாணயத்தாள்களின் புழக்கம் இருப்பதால் இலங்கையில் மக்கள் நாணயத்தாள்களை கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |