சில அத்தியாவசிய பொருட்களுக்கான விசேட பண்ட வரி குறைப்பு

Onion Rice
By Mayuri Mar 28, 2024 02:51 AM GMT
Mayuri

Mayuri

அரிசி மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த வரி குறைப்பு இன்று (27.03.2024) முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொட்டு கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

மொட்டு கட்சி கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பநிலை

பெரிய வெங்காயத்திற்கான வரி

அத்துடன் பெரிய வெங்காயத்தின் (இளஞ்சிவப்பு வெங்காயம்) இறக்குமதிக்கான வரி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.