வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்க பணிப்புரை

Northern Province of Sri Lanka P. S. M. Charles
By Mayuri Aug 09, 2024 05:20 AM GMT

வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுகாதார அதிகாரிகளை பணித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை

வட மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கலந்துரையாடலில், சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவை நிறுவுமாறும், அந்த பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரிய பயிற்சிகளை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் அவசர சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்க பணிப்புரை | Establishment Of Emergency Department

வட மாகாண வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சுகாதாரதுறைக்கு அவசியமான மனித வளம் மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW