இலங்கை விஜயம் செய்யும் இங்கிலாந்து இளவரசி

By Fathima Jan 09, 2024 02:23 PM GMT

இங்கிலாந்து இளவரசி ஆன் (Anne) மூன்று நாள் விஜயமாக நாளை இலங்கை வரவுள்ளார்.

இளவரசியின் இந்த விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார்.

அரசியல் தலைவர்

இலங்கை விஜயம் செய்யும் இங்கிலாந்து இளவரசி | England Princess Will Visit Sri Lanka

இந்த விஜயத்தின் போது அவர் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் இருக்கும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.