இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலொன் மஸ்க்
இலங்கையில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை தொடங்குவதற்காக எலோன் மஸ்க் அடுத்த மாதம் இலங்கை வர வாய்ப்புள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்கின் செயற்பாட்டிற்கு உரிமம் வழங்குவதற்கான அடிப்படை வார்ப்புரு தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர் இதற்கான புதிய விதிகள் மற்றும் விதிமுறைகள் புதிய சட்டத்தின்படி அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
சேவை வழங்குநர் உரிமம்
எனினும், குறித்த பணியை முடிக்க ஜூலை இறுதி வரை கால அவகாசம் அளித்துள்ளோம்.
இந்நிலையில், அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த சேவையை செயல்படுத்த இன்னும் மூன்று வாரங்கள் ஆகும்.
மேலும், ஸ்டார்லிங்கிற்கு புதிய சட்டத்தின் கீழ் சேவை வழங்குநர் உரிமம் வழங்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் மதுஷங்க திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |