திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்

Trincomalee Sri Lankan Peoples Elephant Accident
By Kiyas Shafe Apr 15, 2025 05:51 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

திருகோணமலை - ஹொரவபொத்தானை பிரதான வீதி, கன்னியா பகுதியில் யானையுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு (14) இடம் பெற்றுள்ளது.

விபத்தில் வவுனியா பட்டாணி புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த முபாரக் நிப்ராஸ் (28 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அவரது சக நண்பரான சயான் (22 வயது) என்பவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

விவசாயிகளுக்கான உரமானியம் தொடர்பிலான அறிவித்தல்

விவசாயிகளுக்கான உரமானியம் தொடர்பிலான அறிவித்தல்

விபத்து

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் யானையுடன் மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம் | Elephant Attack In Trincomalee

மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் குளிரூட்டிய போதும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பிரேத அறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக திருகோணமலை பொது வைத்தசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிப‌தி அநுர‌வுக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு

ஜனாதிப‌தி அநுர‌வுக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

சூரியன் மேற்கில் உதித்தால் என்ன நடக்கும்?

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW