இன்னும் 03 வருடங்களில் மீண்டும் மின் கட்டணம் குறைக்கப்படும்! கஞ்சன விஜேசேகர
இன்னும் 03 வருடங்களில் மீண்டும் மின் கட்டணம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் உற்பத்திக் கட்டணம்
மேலும் அவர் கூறுகையில், வருங்காலத்தில் மின்கட்டணத்தைக் குறைப்பது மின் உற்பத்திக் கட்டணத்தைக் குறைப்பதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
அதற்கு குறைந்த விலையில் மின் உற்பத்தி நிலையங்களை விரைவில் ஏற்படுத்த வேண்டும். இந்த புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி மின்கட்டணம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |