வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ரணிலுக்கே முழு ஆதரவு! வேலுகுமார்
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயேட்சை வேட்பாளரான ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனாதிபதிக்கு ஆதரவு
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக மக்கள் தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் இன்று பலர் அரசியல் வரப்பிரசாதங்களை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
பொது வேட்பாளராக இருந்தாலும் அல்லது ஏனைய வேட்பாளராக இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாட்டை நெருக்கடியில் இருந்து தலைவருடம் மக்கள் இன்ற இணைந்துள்ளனர்.
22ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்படுவார் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |