தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படும் அரச பேருந்துகள்
அரச பேருந்துகள் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பயணிகள் போக்குவரத்துக்காக இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் கடமைகளில் பேருந்துகள்
இதேவேளை தேர்தல் கடமைகளுக்காக 1600க்கும் மேற்பட்ட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், சொந்த கிராமங்களை நோக்கிச் செல்பவர்களுக்கான பேருந்து சேவைகள் உரிய வகையில் இடம்பெறவில்லை எனவும், தங்களது பயணத்திற்காகப் பல மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |