வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடர்பில் தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் சுமார் 77 சதவீதம் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் ஒரு கோடியே 32 இலட்சம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை
நாளையும் நாளை மறுதினமும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கவுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டால், 18ஆம் திகதிக்கு பின்னர் தமது பகுதியில் உள்ள தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தேர்தல் நாள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |