சில அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு

Sri Lanka Sri Lanka Cabinet
By Mayuri Sep 04, 2024 04:37 AM GMT

தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானங்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா என்பதை கண்டுபிடிப்பதற்கான அதிகாரம் எங்களிற்கு உள்ளது.

முறைப்பாடு இன்றியும் நடவடிக்கை

முறைப்பாடு இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுக்கலாம்.

சில அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு | Election In Sri Lanka

அமைச்சரவையின் தீர்மானங்கள் கிடைத்ததும் நாங்கள் தேர்தல் நடைமுறைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் ஏதாவது உள்ளனவா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW