உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல்! வெளியாகியுள்ள தகவல்
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ஏ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு தேவையான பணம் தற்போது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான அடிப்படை செலவுகள் தவிர ஏனைய செலவுகள் குறித்து திறைசேறி பரிசீலித்து வருகிறது.
நாட்டிலிருந்து வெளியேறியுள்ள சில வேட்பாளர்கள்
உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் சில வேட்பாளர்கள் இறந்துவிட்ட.னர். அதனால் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |