ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 836 முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 23, 2024 12:40 PM GMT

நேற்று (22) மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 65 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பான அனைத்து முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

836 முறைப்பாடுகள்

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Gallery