தேர்தல் தொடர்பில் அரச அச்சகத்திற்கு சென்ற அறிவிப்பு

Election Commission of Sri Lanka Sri Lanka Election
By Mayuri Jun 28, 2024 06:47 AM GMT
Mayuri

Mayuri

தேர்தலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் அதற்காகத் தயாராகுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழு தமது திணைக்களத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடும் பட்சத்தில், அதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல்

எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் அல்லது அக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.

தேர்தல் தொடர்பில் அரச அச்சகத்திற்கு சென்ற அறிவிப்பு | Election In Sri Lanka

இதன்படி, ஜனாதிபதியைத் தெரிவு செய்வது தொடர்பாகச் சட்டவாக்கத்தின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல், உரிய காலப்பகுதிக்குள் நடைபெறும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW