ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி விரைவில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (24) அல்லது வியாழக்கிழமை (25) நடைபெறவுள்ளது.
தேர்தலை அறிவிக்கும் அதிகாரம்
இந்நிலையில், குறித்த சந்திப்பின் பின்னர் தேர்தல் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பில் இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்படும் என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்து இன்றுடன் (22) 05 நாட்கள் நிறைவடைந்துள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |