இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka
India
Economy of Sri Lanka
By Thahir
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில் காலாவதி திகதி உற்பத்தி செய்யப்பட்ட திகதி என்பன அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும் ஒரு மில்லியன் முட்டைகளைத் தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.