சந்தையில் 50 ரூபாவைத் தாண்டியுள்ள முட்டையின் விலை

Sri Lanka Sri Lanka Food Crisis Egg
By Harrish Jul 19, 2024 11:28 AM GMT

தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாவைத் தாண்டியுள்ளதாக முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். 

முட்டையின் விலை

அத்துடன், முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவிடப்படுவதாகவும் பண்ணைகளில் இருந்து மொத்த வியாபாரிகளுக்கு 45 ரூபா தொடக்கம் 50 ரூபா வரையான விலையில் முட்டை விநியோகிப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தையில் 50 ரூபாவைத் தாண்டியுள்ள முட்டையின் விலை | Egg Prices Increase

மேலும், முட்டை ஒன்றின் மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபா நியாயமற்ற இலாபத்தினை பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW