எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை

Sri Lanka Egg
By Mayuri Jul 22, 2024 04:46 AM GMT

ஒரு முட்டை 42 ரூபாய் என்ற அடிப்படையில் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (22) முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

முட்டை இறக்குமதி தொடர்பில் தீர்மானம்

எவ்வாறாயினும், முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் மீண்டும் முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் முட்டையின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை | Egg Import In Sri Lanka

இது குறித்து வர்த்தக அமைச்சர் திரு.நளீன் பெர்னாண்டோவிடம் அத தெரண வினவிய போது, இலங்கைக்கு மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான தீர்மானம் இன்று அறிவிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW