ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் ; நிசாம் காரியப்பர் தெரிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உயர்நிலை நியமனக் குழுவில் தாம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது ரவி செனவிரட்ன இந்த விடயத்தை கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களின் போது வாக்குறுதி
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி யார் என்பதை நாம் அடையாளம் கண்டுள்ளோம் என ரவி செனவிரட்ன தம்மிடம் கூறியதாக நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
நிசாம் காரியபப்ர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் இன்று (09.10.2025) பதிவிட்டுள்ளார்.
மேலும், உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாக்குதல்தாரிகளை கண்டு பிடித்து தண்டிப்பதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேர்தல்களின் போது வாக்குறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |