வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பொதிகள்: போலி முகவரிகளால் குழப்பத்தில் அதிகாரிகள்
கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் 19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பொதியினை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள பொதிகள் அனுப்பப்படும் நிறுவனம் ஒன்றிலிருந்து நேற்று (28) கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த பொதிகளில் 2,030 கிராம் கொக்கைன் மற்றும் 2,177 கிராம் குஷ் போதைப்பொருள் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முகவரிகள் தொடர்பில் விசாரணை
இந்த பொதிகள் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கொழும்பு மற்றும் கடவத்தை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவை தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த முகவரிகள் போலியானது என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருட்களின் சந்தை பெறுமதி 190 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் எனவும் சுங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |