அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது
Donald Trump
United States of America
By Thahir
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் வழக்கு விசாரணைகளுக்காக மன்ஹாட்டனில் உள்ள மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்த அவர், கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு முன்னதாக பொலிஸ் காவலில் வைக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டிரம்ப் கைது செய்யப்பட்டதன் ஒரு பகுதியாக கைரேகைகள் பதிவு செய்யப்படுவதுடன், அவரை புகைப்படம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், டிரம்ப் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைவிலங்கிடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை எனவும், அவர் தொடர்ந்து சட்ட அமுலாக்கப் பாதுகாப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.