அமெரிக்க டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபா
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Chandramathi
கடந்த மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா 7.6 வீதத்தால் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ரூபாவின் அதிகமதிப்பு
இதனால், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் இலங்கை ரூபாவின் அதிகமதிப்பு போக்கு தொடர்ந்ததாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது.
இதற்கிடையில், பிற வெளிநாட்டு நாணயங்களின் நடத்தையை பிரதிபலிக்கும் வகையில், 2024 மார்ச் 28 வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாயானது யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபா மற்றும் அவுஸ்திரேலிய டொலர் போன்ற ஏனைய முக்கிய நாணயங்களுக்கு எதிராகவும் வலுவடைந்துள்ளது.