இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவான மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Mayuri Jul 22, 2024 09:46 AM GMT

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (22.07.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  308.19 ரூபாவாகவும், கொள்வனவு விலை  298.89 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.94 ரூபாவாகவும், கொள்வனவு விலை  216.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  337.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  323.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவான மாற்றம் | Dollar Rate In Sri Lanka Today

ஸ்டெர்லிங் பவுண்

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி  399.83 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக் கிழமையுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(22.07. 2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது.   

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW