அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Dollars
By Madheeha_Naz Jun 02, 2023 10:10 AM GMT

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(02.06.2023) வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம்

இதற்கு முந்தைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த மூன்று வாரங்களாக மீண்டும் அதிவேக வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.

எனினும் நேற்றையதினத்துடன்(01.06. 2023) ஒப்பிடுகையில், அமெரிக்க டொலர், யூரோ, பிரித்தானிய பவுண்ட் உள்ளிட்ட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்றையதினம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி | Dollar Rate In Sri Lanka Today

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை  300.32 ரூபாவாகவும், கொள்வனவு விலை  287.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  324.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  308.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 377.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி  359.07 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.