ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Dollars
By Fathima Apr 03, 2023 03:12 PM GMT
Fathima

Fathima

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமையுடன்   ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வந்த நிலையில் இன்றையதினம் ரூபாவின் பெறுமதியில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 334.20 ரூபாவாகவும், கொள்வனவு விலை 316.75  ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு | Dollar Rate In Sri Lanka Today

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையுடன்  ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 361.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.20 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.