வலுவடையும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி: மார்ச் முதல் வாரத்திலிருந்து கிடைக்கவுள்ள பலன்

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars Nalin Fernando
By Mayuri Feb 24, 2024 01:46 PM GMT

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன் மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொது மக்களுக்கு கிடைக்கும் என நம்புவதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து வருகிறது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டியது அவசியம்.

பொது மக்களுக்கான பலன்

இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொது மக்களுக்கு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இறக்குமதியாளர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.