நேற்றுடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதியில் கடும் உயர்வு! மத்திய வங்கியின் தகவல்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Sri Lanka Economic Crisis Dollars
By Fathima Apr 04, 2023 10:55 AM GMT
Fathima

Fathima

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம் ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி பதிவாகி வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக ரூபாவின் பெறுமதியில் சடுதியான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 330.50 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதியில் கடும் உயர்வு! மத்திய வங்கியின் தகவல் | Dollar Rate In Sri Lanka

இந்தநிலையில் கடந்த நேற்றுடன்  ஒப்பிடும்போது ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியிலும் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 360.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.65 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.28 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.11 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.