இலங்கையை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: வெளியான தகவல்

Sri Lanka Hospitals in Sri Lanka Doctors
By Shalini Balachandran Jul 18, 2024 03:57 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

1300 வைத்தியர்களும் 500 இற்கும் மேற்பட்ட தாதியர்களும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) நேற்று (17) விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் உதயன் குழுமத் தலைவருமான ஈஸ்வரவாதம் சரவணபவனைச் சந்தித்துக் கலந்துரையாடும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது இலங்கையில் 24 ஆயிரம் அரச வைத்தியர்கள் இருக்கின்றார்கள் இதில் 3500 பேர் வைத்தியர்களாக வெளியேறவுள்ள நிலையில் அவர்களுக்கான வைத்தியர் நியமனங்களை வெகுவிரைவில் வழங்கவுள்ளோம்.

அரச வைத்தியசாலை

ஒவ்வொரு ஆண்டும் 3000 பேர் வைத்தியர்களாக வெளியேறுகின்றமையினால் அரச வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் வெற்றிடங்களை நிரப்பக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கையை விட்டு வெளியேறிய வைத்தியர்கள்: வெளியான தகவல் | Doctors Leaving Srilanka Reason

தற்போது 24 ஆயிரம் வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளில் பணிபுரிகின்றனர் எனினும் தற்போது துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறியமை பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

துறைசார்ந்த வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக நாட்டின் சில இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனினும் கடந்த சில மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய 10 - 15 வரையிலான வைத்தியர்கள் நாட்டுக்கு மீளவும் வருகை தந்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் இது எமக்கு நல்ல ஆரோக்கியமான விடயமாக அமைந்திருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW