யுனானி மருத்துவத்தின் வித்தகர் சையத் கலிபத்துல்லாஹ் சாஹிப் காலமானார்

Chennai India
By Fathima Jun 06, 2023 07:56 PM GMT
Fathima

Fathima

யுனானி மருத்துவத்தின் வித்தகர் பத்மஸ்ரீ வைத்தியர் சையத் கலிபத்துல்லாஹ் சாஹிப்(85 வயது) அவர்கள் நேற்று (06.06.2023) காலமானார்.

தன் மகன் வைத்தியர் அமீனுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் திருக்குர்ஆனை ஓதி கலிமா என்னும் ஏகத்துவ பிரகடனத்தை மொழிந்து அமர்ந்திருந்த நிலையில் அவர் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபத்துல்லாஹ் சாஹிபின் சேவைகள்

யுனானி மருத்துவத்தின் வித்தகர் சையத் கலிபத்துல்லாஹ் சாஹிப் காலமானார் | Doctor Syed Khalifatullah Sahib Passed Away

கலிபத்துல்லாஹ் சாஹிப், இந்திய மருத்துவத்திற்கான மத்திய குழுமத்தின் தலைவராக (Former President Central Council Of Indian Medicine, New Delhi) யுனானி மருத்துவத்திற்கான மத்திய குழுமத்தின் துணைத் தலைவராக ( Vice Chairman Central Council of Research in Unani Medicine, New Delhi) திறம்பட பணியாற்றியவர். குடியரசுத் தலைவரின் தனி வைத்தியராகவும் பணியாற்றியுள்ளார்.

மிகக் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு மருத்துவம் செய்தவர். சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராகவும் தொண்டாற்றியுள்ளார்.

முஸ்லிம் லீக் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர்.அவரது இழப்பு யுனானி மருத்துவ உலகிற்குப் பேரிழப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.