பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
Sri Lanka
Samagi Jana Balawegaya
IMF Sri Lanka
By Fathima
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்ட ஏற்பாடுகள் மீதான வாக்கெடுப்பின் போது , ஆதரவாக தனது வாக்கினைப் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
குறித்த வாக்களிப்பில் 6 பிரதான காரணிகளை முன்வைத்து கலந்து கொள்ளாமலிருப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக அவர் வாக்களித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Joint Now |