பொது சின்னத்தில் போட்டியிட தினேஷ் தரப்பு தீர்மானம்!

Dinesh Gunawardena Sri Lanka Politician Current Political Scenario
By Madheeha_Naz Oct 04, 2024 03:22 AM GMT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி எதிர்வரும் பொது தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

பொது தேர்தல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தேர்தல்

இதற்கமைய முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, எதிர்வரும் பொது தேர்தலில் சகல மாவட்டங்களிலும் பொது சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொது சின்னத்தில் போட்டியிட தினேஷ் தரப்பு தீர்மானம்! | Dinesh On Common Symbol

ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெறவுள்ள பொது தேர்தலுக்கான தமது சின்னங்களை அரசியல் கட்சிகள் தெரிவு செய்துள்ளன.

இந்நிலையில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.