ஜனாதிபதியை புகழ்ந்து பேசும் டயானா கமகே!

Ranil Wickremesinghe Sri Lanka Politician Diana Gamage
By Fathima Mar 31, 2023 10:51 AM GMT

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகத்தின் முன் ஒரு நாட்டை வெற்றிகொள்ளும் ஒப்பற்ற அரசியல் தலைவர் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒரு இணையற்ற அரசியல் மல்யுத்த சாம்பியனானவர் என்றும், உலக சாம்பியனான உசைன் போல்ட்டால் மட்டுமே அவருக்கு இணையாக முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை குறைப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விற்பனைக்கு போட்டி நிறுவனங்களை அழைப்பது பாராட்டுக்குரியது.

ஜனாதிபதியை புகழ்ந்து பேசும் டயானா கமகே! | Diana Gamage Praising The President

எரிபொருளுக்கான திறந்த சந்தையை உருவாக்கும் முடிவு மிகவும் சரியான முடிவு என்றும், போட்டிச் சந்தை இல்லாததால் நாடு எப்போதும் தவறுகளைச் செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.