டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸின் டி- 100 திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி அபிவிருத்தி பெருவிழா நிகழ்வுகள் நாவிதன்வெளி அமீரலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மற்றும் ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீடுகளை கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள டி- 100 வேலைத்திட்டத்தினூடாக பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்யத் தேவையான பணிகள் இதன்மூலம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நிதியொதுக்கீட்டு ஆவணங்கள்
பிரதேச வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், மைதானங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது இடங்கள் என பல்வேறு இடங்கள் அபிவிருத்தி செய்யத்தேவையான நிதியொதுக்கீட்டு ஆவணங்களை கையளித்தார்.
இன வேறுபாடுகள் இல்லாது நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த டி- 100 திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் பெருந்திரளான மக்கள் இந்த விழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |